முகப்பு  |  வாரியத்தைப் பற்றி  |  அறிவிப்புகள்  |  காப்பகங்கள்   |  தேர்வுகள்  |  ஆட்சேர்ப்பு  |  இருப்பு பட்டியல்   |  RTI  |  ஆவணங்கள்  |  டெண்டர்கள்  | தொடர்புக்கு

இவ்வாரியத்தைப் பற்றி  

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (மபதேவா) மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையிலுள்ள பல்வேறு பதவிகளுக்கு, அப்பதவிகளின் தன்மை, முக்கியத்துவம் மற்றும் அத்தியாவசியத்தைக் கருத்தில் கொண்டு, பணியாளர்களை நேரடி பணி நியமனமுறையில் விரைவாகத் தேர்வு செய்வதை குறிக்கோளாகக் கொண்டு அரசாணை (ப.வ.) எண்.1, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை நாள்: 02.01.2012 – ன் படி தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 06.02.2012 முதல் செயல்படத் தொடங்கியது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் பல்வேறு இயக்ககங்களின் கீழ் 200 – ற்கும் மேற்பட்ட வகை பதவிகள் உள்ளன. அனைத்து நேரடி நியமன முறை பதவிகளும் (ஓட்டுநர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் அடிப்படை பணித்தொகுதியின் (Basic Service) கீழுள்ள பதவிகள் நீங்கலாக) மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தேர்வு வரம்பிலுள்ளன. இப்பதவிகள் முறையே கீழ்க்காணும் பணித்தொகுதியின் கீழுள்ளன,...

        • தமிழ்நாடு மருத்துவப் பணித் தொகுதி
        • தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித் தொகுதி
        • தமிழ்நாடு பொதுசுகாதார பணித் தொகுதி
        • தமிழ்நாடு பொதுசுகாதார சார்நிலைப் பணித் தொகுதி

பின்வரும் ஒன்பது இயக்ககங்கள் / ஆணையரகம் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் செயலாற்றுகின்றன, முறையே.,

        • பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் (DPH)
        • மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (DMS)
        • மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதித்திட்டம்) (DMS – ESI)
        • மருத்துவக் கல்வி இயக்ககம் (DME)
        • குடும்பநல இயக்ககம் (DFW)
        • தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்துத்துறை இயக்ககம்
        • இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் (DIM)
        • உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரகம் ( மருத்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் உட்பட)

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நேரடி பணி நியமனமுறைக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பல்வேறு இயக்ககங்களைச் சேர்ந்த வெவ்வேறு அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டிருந்தது. மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழுள்ள அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிகள், அரசு மாவட்ட / தாலுகா தலைமை நிலைய / தாலுகா அல்லாத மருத்துவமனைகள், மருந்தகம் , தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்ட மருத்துவ நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் / சுகாதார துணை மையங்களை உள்ளடக்கிய அரசு மருத்துவ நிறுவனங்களிலுள்ள காலிப்பணியிடங்களுக்கு நேரடி பணி நியமனம் மூலம் மருத்துவப்பணியாளர்களை ஒரே குடையின் கீழ் விரைவாக தேர்வு செய்ய தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தலைவர், உறுப்பினர் மற்றும் உறுப்பினர் செயலர் ஆகியோரைக் கொண்டுள்ளது.


**********

புதுப்பிப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் சம்பந்தப்பட்ட                            இணைப்புகள் | FAQ                                      வடிவமைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட  துறைகளுக்கு சொந்தமானது.                                                                                                                                                           உரிமை தேசிய தகவல் மையம் (N I C)
                                                                                                                                                                                                                    E-Mail: webadmin[dot]tn[at]nic[dot]in