முகப்பு  |  வாரியத்தைப் பற்றி  |  அறிவிப்புகள்  |  காப்பகங்கள்   |  தேர்வுகள்  |  ஆட்சேர்ப்பு  |  இருப்பு பட்டியல்   |  RTI  |  ஆவணங்கள்  |  டெண்டர்கள்  | தொடர்புக்கு

 

பணித்தேர்வு

அ. வெளிப்படையான அறிவிக்கையின் மூலம் பணித்தேர்வு :

       “அனைத்து துணை மருத்துவ மற்றும் தொழில் நுட்ப பணியாளர்களை நேரடி நியமன முறையில் தேர்வு செய்வது வேலைவாய்ப்பகத்திற்கு பணியிடங்களை அறிவிப்பு செய்வதுடன் , வெளிப்படையான அறிவிக்கை (குறைந்தது இரு செய்தித்தாள் விளம்பரம் அவற்றில் ஒன்று உள்ளூர் மொழியில்) அடிப்படையிலான தேர்ச்சி நடவடிக்கை மூலமாக மேற்கொள்ளப்படும். வேலைவாய்ப்பகத்திலிருந்து பரிந்துரைப்பட்டியல் பெறப்பட்டவுடன், வெளிப்படையான அறிவிக்கை (குறைந்தது இரு செய்தித்தாள் விளம்பரம் அவற்றில் ஒன்று உள்ளூர் மொழியில்) வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். வேலைவாய்ப்பகத்தால் பரிந்த்துரைக்கப்பட்ட நபர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அறிவிக்கை விளம்பரத்தின்படி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுவர். தேர்ச்சி நடவடிக்கை விண்ணப்பதாரர்கள் பல்வேறு கல்வித் தகுதிக்கான தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி மதிப்பெண் வழங்கப்பட்டு மேற்கொள்ளப்படும்.   


ஆ. வெளிப்படையான அறிவிக்கை மற்றும் போட்டித்தேர்வின் மூலம் பணித்தேர்வு :

       (i) அனைத்து உதவி மருத்துவர் (பொது), உதவி மருத்துவர் (பல் – பொது / சிறப்பு) மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான நேரடி பணி நியமனத்திற்கான தேர்வு செய்யும் நடவடிக்கை வெளிப்படையான அறிவிக்கை (குறைந்தது இரு செய்தித்தாள் விளம்பரம் அவற்றில் ஒன்று உள்ளூர் மொழியில்) மற்றும் போட்டித்தேர்வு (எழுத்துத்தேர்வு அல்லது மின்னணு முறையில்) இவ்வாரிய நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும்.
     (ii) தமிழ்நாடு மருத்துவ பணித்தொகுதியிலுள்ள சிறப்புத்துறைகளுக்கான உதவி மருத்துவர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை வாக் – இன் (Walk – in) மற்றும் வெளிப்படையான அறிவிக்கை (குறைந்தது இரு செய்தித்தாள் விளம்பரம் அவற்றில் ஒன்று உள்ளூர் மொழியில்) மூலம் முதுநிலை பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். உதவி மருத்துவர் (சிறப்பு) பதவியைப் பொருத்தமட்டில், முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு DNB படித்தவர்களைவிட முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், DNB படித்தவர்களுக்கு முதுநிலை பட்டயம் பெற்றவர்களைவிட முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் இவ்வாரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேர்ச்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

      இவ்வாரிய வலைதளத்தின் மூலமாகவே இணையவழி விண்ணப்பங்கள் பெறப்படும். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, இனசுழற்சி மற்றும் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டு முறைகளைப் பின்பற்றி தகுதியான நபர்கள், அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள உரிமைகள் தொடர்புடைய சான்றிதழ்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். சான்றிதழ் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை சரிபார்ப்பின் அடைப்படையில், தற்காலிகத் தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

 


புதுப்பிப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் சம்பந்தப்பட்ட                            இணைப்புகள் | FAQ                                      வடிவமைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட  துறைகளுக்கு சொந்தமானது.                                                                                                                                                           உரிமை தேசிய தகவல் மையம் (N I C)
                                                                                                                                                                                                                    E-Mail: webadmin[dot]tn[at]nic[dot]in